மாகாண எல்லைகளை நிர்ணயிக்க ஐவர் குழு தெரிவு!

Saturday, October 7th, 2017

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்காக கே.தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக்குழுவில் பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர் சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த ஐந்து பேர் கொண்ட குழுவே மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்யவுள்ளது.மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.


கிராம சேவையாளர் பதவிக்கு 2000 வெற்றிடங்கள்!
சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்!
வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் - பெப்ரல்!
பாதாள உலக கும்பலை கைது செய்ய இலங்கை - இந்தியா இணைவு!
இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்: இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்!