மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
Saturday, April 29th, 2017இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் மலேசியாவின் பிரபல பெற்றோலியக் கம்பனியான PETRONAS கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி Datuk Wan Zulkifee Wan Ariffin உள்ளிட்ட பிரதிநிதிகளை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
தமது கம்பனி இலங்கைக்கு எரிவாயு மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை வழங்கியுள்ள போதிலும் இலங்கையுடன் நீண்டகால திட்டங்கள் இல்லாதிருப்பதனால், இலங்கையுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் நோக்குடன் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக Datuk Wan Zulkifee Wan Ariffin இதன்போது தெரிவித்தார்.
Related posts:
சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!
எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்க...
பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
|
|