மலேசியாவில் இலங்கையர்கள் கைது!

Wednesday, August 9th, 2017

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் சிலர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்நாட்டில் பாரிய தீவிரவாத முறியடிப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், சிலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: