மலக்கழிவு மீள்சுழற்சியிடல் தொடர்பில் குழு அமைக்க முடிவு!

Friday, May 4th, 2018

யாழ். மாவட்டச் செயலகத்தினால் சாவகச்சேரி, சுன்னாகம், நெல்லியடி ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்ட மீள்சுழற்சியிடல் செயற்றிட்டத்தை தொழில்சார் நிபுணர்களின் ஆலோசனைக்கமைய குழு நியமித்து அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மறுவாழ்வளிப்பு, மீள்குடியமர்வு மற்றும் இந்துமத அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு சாவகச்சேரி நகரசபை வலிகாமம் தெற்கு மற்றும் வடமராட்சி தெற்கு, மேற்கு ஆகிய பிரதேச சபைகளில் 75 மில்லியன் ரூபா செலவில் மலக்கழிவு மீள்சுழற்சியிடல் செயற்றிட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சாவகச்சேரி நகரசபையில் கண்ணாடிப்பிட்டியிலும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் சுன்னாகத்திலும் வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையில் கப்பூது வெளியிலும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதால் வேலைகளைத் தொடர்வது தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் 3 உள்ளுராட்சி சபைகளின் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் 3 உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள் பிரதித் தவிசாளர்கள் செயலாளர்கள் தொழில்நுட்ப அலுவலர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: