மருந்தை மாற்றிக் கொடுத்ததால் குழந்தை உயிரிழப்பு!
Saturday, September 16th, 2017தவறுதலாக மருந்தை மாற்றிக் கொடுத்ததால் 4 வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் இடம்பெற்றுள்ளது
தடிமனுக்கு கொடுக்கவேண்டிய மருந்துக்கு பதிலாக வேறு மருந்தொன்றை தனது மகளுக்கு தாய் கொடுத்துள்ளார். இதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்ட சிவகாந்தன் பிறெஸ்மி (04 வயது) குழந்தை நேற்று (15) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வியாழன் இரவு 8.30மணியளவில் மகளுக்கு தடிமன் இருந்தமையினால் பிறிட்டன் மருந்தை கொடுத்ததாகவும் அதனையடுத்து சிறுமி வயிற்றுக்குள் எரிவு என கூறியதாகவும் தாயாரான கிருஷ்ண வேணி தெரிவித்தார். இதேவேளை தாய் வழங்கிய மருந்தை தந்தை குடித்துப் பார்த்த போது மருந்து தவறுதலாக மாறி கொடுத்திருப்பது தெரியவந்தது.
மின்சார தடை ஏற்பட்டிருந்த இரவு வேளையிலேயே பிள்ளைக்கு மருந்து கொடுக்கப்பட்டது. பிறிட்டன் மருந்துக்கு பதிலாக வயது வந்தவர்கள் நோவுக்காக பயன்படுத்தும் மீதைல் சலிசிலேட் என்ற மருந்தே பிள்னளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு மருந்துகளும் ஒரே நிறத்திலான போத்தல்களில் வைக்கப்பட்டிருந்தமையினால்
தவறுதலாக மருந்து மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
சிறுமிக்கு வழங்கிய மருந்தை குடித்து பார்த்த தந்தையும் மயக்கமுற்ற நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|