மத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்க இந்தியா தீவிர ஆர்வம்!

mattala Thursday, December 7th, 2017

மத்தள விமான நிலையத்தை கையேற்பது தொடர்பாக இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை இந்தியா துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைக் கையேற்பதற்கான முன்மொழிவுகளை இலங்கையிடம் இந்தியா ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இத்திட்டத்துக்காக இந்தியா 205 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை 40 ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்ள இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இரு தரப்பினரிடையே முழுமையான உடன்பாடு காணப்படாத நிலைமை உள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கையேற்க உள்ள சந்தர்ப்பத்தில் இப் பேச்சுவார்த்தைகளை இந்தியா துரிதப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.