மண்டைதீவு பாலியல் குற்றச்சாட்டை மறைக்கும் கூட்டமைப்பு எம்.பி.!

download (1) Wednesday, September 13th, 2017

மண்டைதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.

இன்றையதினம் குறித்த சம்பவம்  வெளிவந்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது பின்புலத்துடன் மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தபோதிலும், குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது கடும் அதிருப்தியும் ஆத்திரமும் கொண்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.


அச்சுறுத்தலாக மாறும் பொன்சேகா - தூதரகங்களின் திடீர் நடவடிக்கை!
தகுதியற்றோர் நீக்கப்பட்டு, தகுதியானோர் அமைச்சர்களாக வேண்டும்!
மோடியை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ!
தேர்தலை நடாத்தாவிட்டால் அரசியலமைப்பு குழுக்களிலிருந்து விலகுவோம் - மஹிந்த!
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை: அஸ்கிரிய பீடம்