மக்களை ஏமாற்றுகிறதா கூட்டமைப்பு – புத்திஜீவிகள் விசனம்!

Thursday, July 6th, 2017

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரும் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண மீன்படி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

எனவே, மாகாண சபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதி இன்று நடைபெற்று வருகின்ற 98ஆம் அமர்வில் விசாரணை குழு வேண்டாம், தெரிவுக்குழுவே அமைக்கப்பட வேண்டும் என கோரும் பிரேரணையை சமர்பிக்க இருந்தார். இந்த நிலையிலேயே குறித்த பிரேரணை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த மூன்றரை வருட கால பகுதியில் வட மாகாண சபை முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் தெரிவித்துள்ளார். காலாகாலமாக சபையை கூட்டுவதும் பிரேரணைகளை சமர்ப்பித்து தமக்குள் சண்டையிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ள வடக்கு மாகாண ஆளுங்கட்சியினர் மக்கள் நலன்களில் எதுவிதமான அக்கறையும் கொள்ளாது  வெறும் செய்திகளுக்காக அறிக்கைகளை வெளியிட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவது இதனூடாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என புத்திஜீவிகள் பல் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts: