மகிந்தவின் மீள் வருகை எதிர்வு கூறும்   சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு

Untitled-1 copy Friday, May 19th, 2017

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை ஒதுக்கித்தள்ளிவிடக் கூடாது என்று பிரபலமான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

சர்வதேச நெருக்கடிகள் குழு என்கின்ற இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒப்ன்றிலேய இவ்வாறு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுமையை சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய விதத்திலான பொருளாதார மறுசீரமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு, சட்டம்  இரண்டு பிரதான கட்சிகளையும் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை மட்டுமே முக்கியத்துவப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் நடைமுறைச்சாத்தியமான முறையில் சமரசம் செய்து கொண்டு செயற்படவேண்டும் என்றும்  தனது செய்திக் குறிப்பில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பலப்படுத்தப்பட்ட அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய அரசியல்யாப்பு  அனைத்து சமூகங்களுக்கும் நன்மைபயக்கும் என்று ஜனாதிபதி சிறிசேனா தீவிர  பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் தமிழ் மக்களின்  நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை நிறுவுவதற்கு வேகமாகச் செயற்படவேண்டும். மேலும், வடக்கு-கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும்இ காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ராஜபக்சவைக் காரணம்காட்டி இவைகளைப் புறந்தள்ளிவிடக்கூடாது. தங்களது சொந்த இருப்பிற்கும் அவர்களின் பெரிய வாக்குறுதிகளை ஓரளவிற்கேனும் நிறைவேற்றவேண்டும்இ அரசில் உள்ளவர்கள் தமது மேலாதிக்க அரசியல் அணுகுமுறையை புறந்தள்ள வேண்டியதுடன் நாளாந்த பதவிச்சண்டையையும் ஒதுக்கித்தள்ளி இணைந்து செயல் பட்டால் புதிய மோதலைத் தவிர்க்க முடியும் என்றும் சர்வதேச நெருக்கடி குழு மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்புப் படையினரின் வகிபாகத்தில் பாரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது. இருப்பினும், இராணுவம் தங்களிடம் உள்ள மேலதிகக் காணிகளை உரியவர்களிடம் வழங்குவதற்கு மறுப்பதுடன், இந்தப் பிரதேசங்களில் கடைகளையும் உணவகங்களையும் தொடர்ந்து நடத்தி வருவதுடன் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பிரதேசங்களில்புத்தர்சிலைகளையும் நிர்மானித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கத் தவறினால் அது வடக்கில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு வழிவகுக்கும். இது கூட்டு அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் சர்வதேச நெருக்கடி குழு தெரிவிக்கிறது.