மகாஜனக் கல்லூரி மாணவி மரணம்: சோகத்தில் தெல்லிப்பளை!

Sunday, March 18th, 2018

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர்  நோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழ். மகாஜனக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி சிவநேசன் பிரியங்கா உன்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட சிவநேசன் பிரியங்கா நீண்டகாலமாக மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

மகாஜன பெண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் மூத்த வீராங்கனையான சிவநேசன் பிரியங்கா பல சாதனைகளை புரிந்துள்ளார்.

குறித்த மாணவியின் இழப்பு குறித்த பாடசாலையை மட்டுமல்லாது யாழ்மாவட்ட விளையாட்டுத்துறையினரையும் பெரும் சோகத்திலாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: