போலி மருத்துவர்களிடம் அவதானமாக இருங்கள் – வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Saturday, March 3rd, 2018

போலி மருத்துவர்களிடம் அவதானமாக இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது தொடபர்பாக அரச மருத்துவ சங்கத்தின் வவுனியா கிளை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது தொடர்பாக அரச மருத்துவ சங்கத்தின் வவுனியா கிளை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிது காலத்துக்கு முன்னர் கொழும்பு சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கையில் 30ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி எழுந்த மக்கள் குரலிலே ,அவர்கள் யார் என்று பொது மக்களுக்கு அறியப்படுத்தப்படுவதுடன் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது .

மக்களுடைய கோரிக்கையை ஏற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியாக் கிளை, வவுனியா மாவட்டத்தில் சட்ட விரோதமாக மருத்துவ நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் விபரங்களைத் திரட்டி உரிய அதிகாரிகளிடம் அனுப்பி வைத்துள்ளது .

எந்த விதமான தகுதியும் ,மருத்துவ சபையின் பதிவுமின்றி மருத்துவம் பார்த்தல் வெளிநாட்டில் மருத்துவம் கற்ற பின்னர் இலங்கையில் பரீட்சைக்குத் தோற்றி இலங்கை மருத்துவ சபையின் பதிவினைப் பெற்றுக் கொள்ளாது மருத்துவம் பார்த்தல் ,சித்த ஆயுள்வேத பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அங்கிகாரம் பெற்ற மருத்துவர்கள் (அலோபதி )மருத்துவத்துக்குரிய மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்த்தல் ,மேலைத்தேய மருத்துவ முறைக்குப் பட்டம் பெற்றவர்கள் சித்த ஆயுர்வேத பாரம்பரிய மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்த்தல் ஆகியன சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகும் .

மேற்குறித்த  வகைகளில் அடங்கக் கூடிய பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தனிநபர்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியாக் கிளை அடையாளம் கண்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரப்பகுதி குடியிருப்பு ,இரண்டாம் குறுக்குத் தெரு,கோவில் குளம் ,சிதம்பரபுரம், தேணிக்கல் பூந்தோட்டம்,குருமன்காடு பட்டைக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் சட்ட விரோத மருத்துவ நடவடிக்கைகள் அதிகளவில் இடம் பெறுவதாக ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எம்.பி.பி.எஸ், எம்.டீ போன்ற பட்டங்களுடன் எஸ்.எல்.எம்.சீ பதிவு இலக்கமொன்றைக் காண்பித்து இருக்கும் மருத்துவர்களும் ஆர.எம்.பி என்று குறிப்பிட்டு எஸ்.எல்.எம்.சீ பதிவிலக்கத்தை குறிப்பிட்டு இருப்பர்களும் மேலைத்தேய அலோபதி சிகிச்சை முறைகளை (ஆங்கில மருத்துவம் )செய்வதற்கு தகுதி பெற்றவர்கள் .எஸ்.எம். எஸ் போன்ற பட்டங்கள் பெற்றவர்களும் ஆர்.ஏ.எம்,ஆர் .ஜ.எம்.பி போன்ற பதிவுகளைக் கொண்டிருப்பவர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளைச் செய்வதற்கு தகுதி பெற்றவர்கள் தனியார் மருத்துவ முறைகளைச் செய்வதற்கு தகுதி பெற்றவர்கள்.தனியார் மருத்துவ நிலையமொன்றின் மூலம் சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவரும் தங்களது தகமை மற்றும் பதிவுச் சான்றிதழை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.

இப்படியான சட்ட விரோத சிகிச்சை முறைகள் மூலம் ஏற்கனவே அதிகரித்த நிலையில் உள்ள சிறுநீரக நோய்கள் மேலும் தீவிரமடைவதுடன் கிருமி கொல்லி மருந்துகள் செயற்படாமல் போகும் தன்மை என்பன ஏற்படும் .

அத்துடன் சட்ட விரோத கருக்கலைப்பு முறையற்ற  சிகிச்சைகளால் உயிரிழப்பு என்பனவும் ஏற்பட்டு இருப்பாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்கள் தாங்கள் சிகிச்சை பெறச் செல்லும் மருத்துவரின் தகமை பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .

முறையற்ற சிகிச்சை நடவடிக்கைகளை இனம் கண்டால் உரிய அதிகாரிகளிடம் (சுகாதார மருத்துவ அதிகாரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ) உடனடியாகக் கடிதம் மூலம் முறையிடுவது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றுள்ளது.

Related posts:

வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்...
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் ஒருவருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்த...

சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு - மத்திய வங்கி ஆளுநர்...
மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்...
ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை - வலுசக்தி மற்ற...