பொலிஸார் அதிரடி: தப்பியோடும் ஆவாக்குழு!
Thursday, October 4th, 2018பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பிரகாரம் ஆவா குழுவின் உறுப்பினர்களை கைதுசெய்யும் நோக்கில் சில பொலிஸ் குழுக்கள் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக இதுவரை யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் மட்டும் 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆவா குழுவினர் பயன்படுத்துவதாக கூறப்படும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய காலத்தில் ஆவா மற்றும் தனுரொக் குழுவினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகளிலும் வாள்வெட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|