பொலிஸாருக்கு தனிப்பட்ட வீடமைப்பு வசதி – பிரதமர்!

Saturday, September 23rd, 2017

இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனிப்பட்ட வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு வட்டியில்லா கடன் வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி வெக்குனுகொட பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்பு தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொமர்பான நிகழ்வில் வீடமைப்பு தொகுதி உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் தொகுதிக்கு 33 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது

பிரதமர்  அங்கு உரையாற்றுகையில், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ வீடமைப்பு வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது என்று சுட்டிக்காட்டியதுடன,  2015ஆம் ஆண்டு மிக பாரதூரமான குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளன என்று தெரிவித்தார். குற்றச் செயல் தொடர்பான விசாரணைகள் 70 வீதம் பூர்த்தியடைந்தன. ஆனால், இது 75 வீதமாக இருத்தல் வேண்டும். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts: