பொலிஸாரின் அத்துமீறல்கள் வடக்கு – கிழக்கிலேயே அதிகம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசனம்!

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்களே முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் பொலிஸாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை பொலிஸில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தாமை, பக்கச்சார்பாக நடந்து கொள்ளல், அதிகாரத் துஸ்பிரயோகம், தடுப்புக் காவலில் வைத்துத் தாக்குதல், பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தல் போன்றனவாகும்.
கடந்த ஆண்டில் பொலிஸார் இரண்டு மனிதப் படு கொலைகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டமை, இலஞ்சம் வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டில் மட்டும் மட்டக்களப்பு நகரத்தில் இருந்து பொலிஸாருக்கு எதிராக சுமார் 140 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|