பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ரிச்சட் தாலருக்கு!

Tuesday, October 10th, 2017

2017 ஆம் வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சட் தாலருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தனித்தன்மை செயல்பாட்டை கொண்ட பொருளாதாரத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் இவர் என உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சிக்காகோ பூத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக கடமையாற்றும் இவர், நட்ஜ் என்ற பொருளாதாரம் தொடர்பான நூலை பிறிதொரு நிபுணருடன் இணைந்து எழுதியுள்ளார்

அதிக அளவிலான பிரதிகள் சர்வதேச ரீதியாக விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல பொருளாதார சமூக பிரச்சனைகள் இந்த நூலின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக பல கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நோபல் பரிசிற்காக இவரை பரிந்துரை செய்துள்ள நோபல் பரிசு குழுவினர், ரிச்சட் தாலரின் பொருளாதார கொள்கைகள், பொருளாதாரத்தின் மன இயல் சாத்திரமாக கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: