பேருந்து கட்டணங்கள் தொடர்பில் குழப்பநிலை!

Monday, May 28th, 2018

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் 12.56 வீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டும் கட்டணங்கள் தொடர்பில் குழப்பநிலைகளே தொடர்கின்றன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

அந்தவகையில் இதுவரைகாலமும் காணப்பட்ட ஒவ்வொரு தரிப்பிடங்களுக்கிடையிலான பாய்ச்சல் கோட்டு மூலமான கட்டணங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் சில பிரதேச ரீதியான கட்டணங்கள் அதிகரித்தாலும் முன் இருந்த கட்டணங்களை விடக் குறைவடைய இருப்பதாகவும் மேலும் சில பிரதேச ரீதியான கட்டணங்கள் அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் உடனடியாக இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.

எனினும் இது தொடர்பில் தனியார் சிற்றூர்திச் சங்கத்தினருக்கு இந்த நடைமுறை தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கப்பெறவில் என்றும் இந்த நடைமுறை கொண்டுவரும் பட்சத்தில் தனியார் உரிமையாளர்களுக்கும் நஸ்டம் ஏற்படவே வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்தக் கட்டண குழப்ப நிலையால் மக்கள் குழப்பமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசி...
வங்கி சேவைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும் – இரு தினங்கள் சகல மதுபானசாலைகளும் மூடப்படும் எனவும் அறிவி...
எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சிவஞானம் ஒருங்கிணைப்பு குழு தலைவரா...

நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது - கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள் நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் - தேசிய தேர்தல்கள் ஆணை...
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கம் – நித...