புதிய மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை நாளை !

புதிய மாணவர்களை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
மாவட்ட மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையும் விட மூன்று மடங்கு அதிகமான விண்ணப்பதாரிகள் அவர்களின் தகுதிக்கு அமைய நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேர்முக பரீட்சை தேசிய கல்வியியல் கல்லூரி மட்டத்தில் இடம்பெறும். நாடு முழுவதும் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 27 பாடநெறிகளுக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்றுமுதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை - பொலிஸ்பேச்சாளர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் - சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை!
|
|