புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 படிமுறைகள்  – ஜனாதிபதி !

Wednesday, November 1st, 2017

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 03 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரது பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்துதல், சர்வ சமய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சர்வ மத மாநாட்டினை நடாத்துதல் மற்றும் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் செயற்படும் நாட்டின் கல்விமான்களினதும் புத்திஜீவிகளினதும் மாநாட்டினை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலமாக முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.