புகையிரத திணைக்களத்தின் சேவையை வினைத்துறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!

Wednesday, December 27th, 2017

இலங்கை புகையிரத திணைக்களத்தின் சேவை அடுத்த வருடம் மேலும் வினைத்திறனாக்கப்படும் என்று புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய புகையிரத சேவையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு கிடைக்கலாம் என்று பொது முகாமையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பமாகும் எனவும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: