பிணையில் வந்தவரே சங்குவேலி வாள்வெட்டின் சூத்திரதாரி – மானிப்பாய் பொலிஸார்!
Saturday, November 18th, 2017சங்குவேலி பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபரே செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட மானிப்பாய் பகுதியைச் சேர்நத கிரிவலம் என்ற ஆவா குழுவின் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இளைஞன் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் குறித்த நபரிடமிருந்து வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. குறித்த நபர் ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் என தெரிவித்த பொலிஸார் மறுநாள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கூறினர். அந்நபரின் தலைமையிலேயே சங்குவேலி, கோண்டாவில் பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறினர். குறித்த நபரை மீண்டும் கைது செய்ய பொலிஸார் தேடி வருகின்றனர்.
Related posts:
|
|