பால்மாவின் விலையினை அதிகரிக்க அனுமதி!

Monday, March 26th, 2018

இறக்குமதி செய்யப்பட்ட பால்மா ஒரு கிலோ கிராமிற்கான விலையினை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவுக்கான விலை அதிகரித்தமை காரணமாக பால்மா இறக்குமதியாளர்கள் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோரிக்கைவிடுத்திருந்தது.

நுகர்வோர் விவகார அதிகார சபையானது குறித்த கோரிக்கையினை வாழ்க்கைச் செலவு குழுவுக்கு முன்வைத்திருந்த நிலையில், இது குறித்த தீர்மானம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்குகிடைக்கப் பெற்றதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அத்தியட்சகர் ஜெனரல் டீ.ஜீவானந்த தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் வாரங்களில் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு கிலோகிராம் பால்மாவின் அதிகபட்ச விலை 810 ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: