பாராளுமன்றத்தைக் கலைத்தால் 70 எம்.பிக்களுக்கு ஓய்வூதியமில்லை!

Friday, February 16th, 2018

பாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வருடங்கள் கலைக்காமல் கொண்டு சென்று ஐந்து வருடத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே இந்த 70 உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு என தெரிவிக்கப்படுகின்றதுஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி ஐந்து வருடங்களை நிறைவு செய்வாராயின் அவருக்கு

அவர் பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றதுபாராளுமன்றத்திலுள்ள ஒரு உறுப்பினருக்கு கொடுப்பனவுகள் தவிர்ந்த மாதாந்த சம்பளமாக 5428 ரூபா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கம்!
பளை சம்பவம் தொடர்பில் சொல்லப்படும் கதைகள்?
வடக்கில் 3 ஆண்டுகளில் 62 பேரை காணவில்லை மனித உரிமைகள் ஆணைக்குழு புள்ளி விபரத்தில் தெரிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரிப்பு: எதிராக நீதிமன்ற நடவடிக்கை!
பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தேர்தல் நடத்தப்படும் - உயர்கல்வி அமைச்சர்!