பாதுகாக்கப்பட வேண்டிய நினைவிடங்கள் தொடர்பில் அறிவிக்கவும் – தொல்பொருள் திணைக்களம்!

tholporul1 Friday, October 6th, 2017

மாகாணம் மற்றும் மாவட்ட மட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பில் தகவல்களை தருமாறு தொல்பொருள் திணைக்களம், மக்களிடம் கோரியுள்ளது.

அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை அந்த தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், பின்னர் அவை இரண்டு விசேட குழுக்களின் கீழ் ஆராயப்பட்டு பாதுகாப்பை மேற்கொள்ள வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது