பாடசாலைகளை ஒழுங்குபடுத்த கல்வி மேற்பார்வை சபை – கல்வியமைச்சு !

Saturday, July 7th, 2018

அரச பாடசாலைகள், தனியார் மற்றும் தேசிய பாடசாலைகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு கல்வி மேற்பார்வை சபை ஒன்றை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டங்களுக்கு அமைய கல்வி மேற்பார்வை சபையை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்றிறன் ஆய்வு தொடர்பான மேலதிக செயலாளர், பேராசிரியர் மதுரா வெஹேல்ல தெரிவித்துள்ளார்.

இது நியாயமான கல்வி வாய்ப்புகள், ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் கல்வியூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகளை மாகாண ரீதியில் விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வரி விதிப்பு மட்டும் மதுவை ஒழிக்க வழியாகாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
இலங்கையின் 2வது இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யுவதி உயிரிழப்பு!
பொருளாதாரம் 5 வீதத்தால் அதிகரிக்கும் - உலக வங்கி!
அரச வைத்திய சாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்!
தமிழ் பேசும் பெண் பொலிஸாரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை!