பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு!

Friday, January 19th, 2018

பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பாவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்வி அமைச்சில் திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்பதுடன் அதேவேளை ஆசியர்கள் பாடசாலைகளில்தொலைபேசி பயன்படுத்துகிறார்கள். இதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

ஆனால் தொலைபேசி என்பது அனைவருக்கும் தேவையான பொருளாக மாறிவருகின்றது. ஆகவே தேவை ஏற்படின் ஆசிரியர்கள் அவர்களது ஓய்வு அறையில்பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: