பாஃம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு – அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021

இரண்டு முன்னணி நிறுவனங்களின் ஊடாக, பாஃம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட போது, அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வகைப்பாட்டு எண்கள் முறையாக குறிப்பிடப்படாமையினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நிறுவனங்கள் 2013 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட இறக்குமதியின் ஊடாக இவ்வாறு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பு தொடர்பில், குறித்த இரண்டு இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் சுங்கப்பிரிவின் பிரதானி ஆகியோர் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: