பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானம்! 

Saturday, June 2nd, 2018

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் போல குழப்பமான முறைமையில் இல்லாமல் பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் எனவும் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டுமாயின், அடுத்த தேர்தலை மாற்றங்களுடன் நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் இணைந்து புதிய முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினருக்கு ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: