பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Monday, May 1st, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெஹான் டி சில்வாவே  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.கடந்த மூன்று மாத காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு உரிய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: