பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களின் இறுதித் திகதி அறிவிப்பு!

Saturday, January 6th, 2018

2017 கா.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக நுழைவுக்கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த கையேட்டிலுள்ள தரவுகளுக்கு அமைய இணையத்தினூடாக இயங்கலை(Online) முறையில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் அவற்றினைஇன்று(05) முதல் ஜனவரி 26ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இம்முறை 30,500 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு 163,104 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: