பறி போகுமா பொன்சேகாவின் பதவி

Saturday, May 20th, 2017

பீல்ட் மார்செல் சரத் பொன்சேகா நாடளமன்ற உறுபினராக நியமனம் பெற்றது சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தரும்முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினருமாகிய அஜித் பிரசன்னா உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசரணை ஜூலை 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது.

 தலைமை நீதிபதி பிரியசத் டி மற்றும் நீதிபதிகள் சிசிரா ஜே.டி.அப்ரு மற்றும் நலிண் பெரேரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு நேற்ரைய தினம் விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்பட்ட போதே விசாரணை  ஒத்தி வைக்கபட்டது.

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என மனு தாரார் தனது மனுவில் குறிப்பிடிருந்தார்.

பிரதி வாதி சரத் பொன்சேகாவுடன்  ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் ஹசிம், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரும் இந்த வழக்கின் பிரதி வாதிகளாக இனைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  போது  மனுதாரர்  சார்பில் சட்டத்தரணி திவ்யா வேரகொட வும் சட்டத்தரணி எஸ்.சிறிகாந்தா பொன்சேகா தரப்பிலும்  துணை வழக்கறிஞர், ஜெனரல் நெரில் புல்லே சட்டமா அதிபர் திணைகளத்தின் சார்பிலும் நீதி மன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

2015ம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இல்லாத பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான தற்போதைய நியமனம் ஜனநாயக உரிமைகள்,விகிதாசார பிரதிநிதித்துவம், பாராளுமன்றத் தேர்தல் சட்டம்  ஆகியவற்றின் அடிப்படையில் செல்லுபடியானதாக இருக்க முடியாது என  வாதியின் சார்பில் வாதம் முன்வைக்கப் பட்டது.

பொன்சேகா வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட விரோதமானது எனவும் உடன் அதனை ரச்துச் செய்ய வேண்டும் எனவும்  பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட மனுவில் மேலும் தெரிவிக்கப் பட்டுளது

Related posts: