படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!
Thursday, May 30th, 2024படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவர் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று (30.05.2024) நடைபெற்றது.
இதன் போது காணி சுவீகரிப்கு தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து பலதரப்பினரால் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
மேலும் யாழ் மாவட்டத்தில் படையினருக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன். இன்றும் கூட சுழிபுரத்தில் மக்களின் காணிகளை படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீடு செய்ய இருந்தனர். எனினும் காணி உரிமையாளர்கள் பொது மக்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் காணி அளவீடு செய்ய அங்கு வந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.
இவ்வாறு பல இடங்களிலும் காணி அளவீடு செய்ய வருகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஆனாலும் பொது மக்களின் காணிகளை படையினருக்கு வழங்க முடியாது. அத்தோடு படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்வதையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இதன் போது படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.
இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் படைகளின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|