நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு  சீனா நிதி உதவி!

full_51dfee2990 Wednesday, May 16th, 2018

மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan  அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம்தெரிவித்தார்.

சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் இந்த நிதியை கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர், இதனைபெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


மாறுகிறதா இலங்கை தொடர்பிலான இந்திய வெளியுறவுக் கொள்கை!
விரைவில் கிராம உத்தியோத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்...
வரி தொடர்பான முன்மொழிவுகள் ஏப்ரல் முதல் அமுல் - அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர்!
வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து செவ்வாயன்று கண்டனப் பேரணி!