நுண்கடன் திட்டத்தை தடை செய்யுமாறு பரிந்துரைப்பு

வவுனியா மாவட்டத்தில் தொடரும் கடன் திட்டம் என்னும் பெயரிலான மக்கள் வாழ்வுக்கு குந்தகமாக அமையும் நுண்கடனை தடை செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் மாவட்டச் செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் வெறுக்கப்படும் கடன் திட்டங்கள் கிராமப்புற மக்களிடம் பொய் வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் குறித்த கடன் அறவீடு என்னும் பெயரில் அந்தக் குடும்பங்கள் வாட்டிவதைக்கப்படுகின்றன.
இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்திய வங்கியின் விதிமுறைகள் அனைத்தையும் புறந்தள்ளி 30 வீத வட்டியை அறவிடுகின்றனர். அத்துடன் குறித்த காலத்துக்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் உடனடியாகவே வட்டியை முதலுடன் கணித்து வட்டி கோருகின்றனர். அது மட்டுமன்றி கிராமங்களுக்குள் இரவு வேளைகளில் இந்த கடன் அறவீட்டாளர்கள் செல்வதனால் மக்கள் அஞ்சுகின்றனர். வவனியா நெடுங்கேணிக்கிராமம் இந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த கடன்முறையினை உடனடியாக எமது மாவட்டத்தில் மேற்கொள்ளும் அனைத்து நிதி நிறுவனங்களையும் தடை செய்ய மாவட்டச் செயலாளர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் எழுத்தில் கோரியுள்ளார்.
Related posts:
|
|