நீதிமன்றில் ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலப்ரிய நந்தராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் இன்று ஆராயப்பட்டபோதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவில் அடங்கிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து கோரப்பட வேண்டும் என்றும் அதன் காரணமாக அவர் உயர்நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது அவசியம் என பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடாளுமன்ற சர்ச்சை : விசாரணை செய்ய 7 நீதிபதிகள் நியமனம்!
கொரோனா தொற்று: அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது!
மூவர் கைது – அச்சுவேலியில் தப்பிச் சென்ற ஐந்து பேரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!
|
|