நீதிபதி இளஞ்செழியன்  வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!

Saturday, July 22nd, 2017

யாழ்மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வாகனம் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: