நிதி பற்றாக்குறை: நிதி மோசடிப் பிரிவு செயலிழப்பு !

Tuesday, May 2nd, 2017

ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவின் செயலாளர் காரியாலயமும், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவும் கடந்த ஒரு மாத காலமாக செயலிழந்து இருக்கின்றன என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு பிரிவுகளிலும் பணி புரியும் புலனாய்வு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ கொடுப்பனவுகளுக்கான நிதியில் ஏற்பட்டுள்ள குறைபாடே அந்தப் பின்னடைவுக்குக் காரணமெனவும் தெரியவருகின்றது.

கூட்டு அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஊழல், மோசடி ஒழிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை நடத்துவதன் மூலம் இந்தப் பிரிவுக்குத் தேவையான ஒத்துழைப்பை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வழங்கி வந்தது. எனினும் கடந்த ஒரு மாத காலமாக நிதி பற்றாக்குறை காரணமாக இந்தவிரு பிரிவுகளின் செயற்பாடுகளும் செயலிழந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது

Related posts: