நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ள இலங்கை!

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நான்கு தசம் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கட்டுமானத்துறையில் முதலீடுகள் அதிகரித்தமை வளர்ச்சிக்கு பிரதான காரணமென மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர சேவைகள் நிதிக்காப்புறுதி தொலைத் தொடர்பாடல் முதலான துறைகள் சார்ந்த பங்களிப்பும் அதிகமாகும். கடந்த ஆண்டு கைத்தொழில் துறை ஆறு தசம் நான்கு சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
எவ்வாறேனும் சீரற்ற காலநிலையின் விளைவுகள் காரணமாக விவசாயத்துறை வீழ்ச்சி கண்டது. தேயிலை றப்பர் உற்பத்தியும் குறைந்ததென இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - தேசிய மருத்துவ அதிகார...
சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!
எல்லாமே தவறாக நடப்பது போன்றே தற்போது தோன்றலாம் - பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள் - புரட்சிக...
|
|