நாட்டின் பலபகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Thursday, June 3rd, 2021

நாட்டின் பலப்பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் சில இடங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

எனவே இடியுடன் கூடிய மழைக்காலங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts: