நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை !

Sunday, November 12th, 2017

831 அரச நிறுவனங்களின் 2015ம் ஆண்டு கணக்கு அறிக்கையை உள்ளடக்கிய கணக்கு மற்றும் பொது செயற்பாடு குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு அரச கணக்கு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் நிதி மற்றும் ஊடகத்துறை  பிரதியமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

பாராமன்ற கட்டத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர்  இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் கணக்காய்வு தொடர்பான அரச கணக்கு தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கும் அரசாங்கம், மாகாணம் மற்றும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் ஒன்றிணைத்தல் மற்றும் நிறுவனங்களை பாராட்டும் வேலைத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் 831 அசர நிறுவனங்களின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

Related posts: