நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவ பிரதான சந்தேகநபர் சரண்!

Tuesday, July 25th, 2017

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் உறுதிப்பத்தியுள்ளனர்.

.39 வயதான சிவராசா ஜெயந்தன் என்ற குறித்த நாபரே சநணடைந்தவராவார்.

கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கோவில் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பாதுவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.  இதுவரையில் 30க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று சரணடைந்துள்ளார்.

.

Related posts: