நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கம்!

Monday, May 1st, 2017

நல்லிணக்கம் மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு  இலங்கை படையிளரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்தை தளமாகக்கொண்டு இயங்கும்  இரண்டு அலுவலர்கள் கடந்த வாரம், கூட்டுப்படை தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவை, இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளதாகவும். இதன்போது மகேஸ் சேனாநாயக்க, யாழ்ப்பாண கட்டளை தளபதியாக இருந்தபோது மேற்கொண்ட நற்பணிகளை குறித்த அலுவலர்கள் பாராட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நல்லிணக்க நடவடிக்கைகளில் இராணுவத்தினர் பங்கு, காணிவிடுவிப்பு, மீனவ சமூகத்துக்கான தொழில் வாய்ப்புக்கள் போன்ற விடயங்கள் குறித்து அவர் மகேஸ் சேனாநாயக்கவிடம் கேட்டறிந்துக்கொண்டனர்.

Related posts:


வர்த்தமானியில் உள்ளவாறு சம்பளம் வழங்கப்படும் - பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன பேச்சாளர் தெரிவிப்ப...
அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அரச வைத்...
வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோச...