தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் இடமாற்றம் உண்டு – கல்வி அமைச்சர்!

Monday, October 30th, 2017

ஆசிரியர்கள் மாத்திரமன்றி, 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசலையில் சேவையாற்றும் தேசிய பாடசாலை அதிபர்களும் ஏனைய பாடசாலைகளுக்கான இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி றிச்மன்ட் கல்லூரியில இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வு நேற்றுளூ இடம்பெற்றது.

கல்வி கட்டமைப்பின் சிறப்பான செயற்பாட்டிற்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் தாம் எந்த வகையிலும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  தெரிவித்தார்.

Related posts: