தேசிய பாடசாலைகள்; பாதிக்க ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலைய ங்களாக செயற்படும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 31st, 2017

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்தையும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக பெருமழைரூபவ் பெருவெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களிலும்ஏனைய இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுரூபவ் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலதரப்பட்டோரும் இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து வழங்கி வருகின்றனர்.

தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பொருட்டு நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்திலும் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபடும் வீதம் அதிகரிப்பு - தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக...
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...