தேசிய இரத்த வங்கிப் பணிகள் ஸ்தம்பிதம் அடை வாய்ப்பு!

Monday, July 9th, 2018

தேசிய இரத்த பரிமாற்ற சேவை பணிப்பாளருக்கும் அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலால் தேசிய இரத்த வங்கிப் பணிகளில் இன்று ஸ்தம்பிதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாரஹன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த பரிமாற்ற சேவையில் பணியாற்றும் 42அலுவலர்கள், நிலையத்தின் பணிப்பாளர் ருக்ஷான் பெலன்னவை பதவிநீக்குமாறு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய பணிப்புறக்கணிப்புக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.