தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் – இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை!

Thursday, November 12th, 2020

இலங்கை வாழ் இந்துக்கள் இம்முறை தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவது சிறந்ததாகும் என்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கு கொண்டு ஆலயங்களுக்கு செல்லாது வீடுகளில் இருந்தவாறு வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தலை தாம் வரவேற்பதாக மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் ஏ.பி.ஜயராஜா தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: