திருகோணமலையில் நில அதிர்வு!

tremor Wednesday, September 13th, 2017

திருகோணமலையின் மூதூர் மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளை அண்மித்து நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம்  கடந்த திங்களன்று இரவு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூதூரை அண்டிய நெய்தல் நகர், பாலை நகர் மற்றும் அரபா நகர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பாரிய சத்தமொன்றையும் குறித்த நேரத்தில் கேட்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிக்டர் அளவில் 5 இலும் குறைவாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது. எனினும், இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையெனவும் இது வழமையாக உலகளவில் ஏற்படும் நில அதிர்வு வகையைச் சார்ந்தது என்றும் புவிச்சரிதவியல் திணைக்கள பணிப்பாளர்களுள் ஒருவரான பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்தார்


வாசுதேவ நாணயக்காரவின் வழக்குக்கு  அட்டர்னி ஜெனரல் ஆட்சேபனை !
ஐயாயிரம் ரூபாய்த்தாளை  இரத்து செய்யும் தீர்மானம் இல்லை -மத்திய வங்கி!
அமைச்சரவை மாற்றதை வலியுறுத்தும் தொண்டு நிறுவனங்கள்
வறட்சியின் தாக்கம்:  வடக்கில் இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம்!