தானியங்கி புகையிரதக் கடவைகளை அமைத்து உயிரிழப்புக்களை நிறுத்துங்க!

Friday, April 27th, 2018

கிளிநொச்சி அறிவியல் நகர் தொடக்கம் பச்சிலைப்பள்ளி முகமாலை வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் 38 இற்கும் மேற்பட்ட வீதிகள் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படும் வீதிகளில் 13 வரையான வீதிகளே பாதுகாப்பு கடவைகள் அமைந்த வீதிகளாகக் காணப்படுகின்றன. ஏனைய வீதிகள் பாதுகாப்பற்ற மிகவும் ஆபத்தான வீதிகளாகவே காணப்படுகின்றன.

குறித்த வீதிகள் இவ்வாறு காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்கள் கூட இடம்பெறுகின்றன.

எனவே குறித்த வீதிகளுக்கு தானியங்கி புகையிரதக் கடவைகளை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: