தலைக்கவசம் அணிவதால் தலைமுடி உதிருமா?

shark-raw-black-metall-matt-helmet Wednesday, October 11th, 2017

இந்தக் காலத்தில் முடி உதிர்வு ஏற்படுவது சர்வசாதாரணமான விடயமாகி வட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் தலைக்கவசம் அணிவதும் ஒரு காரணம் என ஒரு சாரார் நம்பி வருகின்றனர்.

இதன் விளைவாக உந்துருகளில் பயணிக்கும் போது தலைக்கவசத்தை அணிவதைத் தவிர்க்கின்றார்கள். இது உண்மையிலேயே முற்றிலும் தவறான செயல். சரி உண்மையில் தலைக்கவசம் அணிவதால் முடி உதிருமா என்பதைத் தொடர்ந்து வாசித்து உங்கள் முடிவு தொடர்பில் சிந்தியுங்கள்.

தலைக்கவசம்இ தொப்பி போன்றவற்றை அணிவதால்இ முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் ஒட்சிசன் தடைப்படுகிறது என்ற கருத்தைச் சிலர் கூறிவருகின்றனர். இதனால் தான் முடி உதிர்வடைகின்றது என்ற கருத்து பொதுவாக நிலவிவருகின்றது.

ஆனால் உண்மை என்னவென்றால்இ முடியின் வேர்க்கால்களுக்கு வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஒட்சிசன் தேவைப்படுவதில்லை. அவற்றிற்குத் தேவையான வாயு குருதியின் மூலமாகவே கிடைக்கின்றது. உண்மையில் முடிக்கு பெரிய தடையாக இருப்பது இறுக்கமான ஹெயார் ஸ்டைல் தான்.

இறுக்கமான ஹெயார் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்து முடி உதிர்வு ஏற்படுகின்றது. எனவே முடியைப் பின்னோக்கி வழுவாக இழுத்து குதிரை வால் போன்ற இறுக்கமான ஹேர் ஸ்டைல்களை செய்வதால் தான் முடி உதிர்வு ஏற்படுகின்றது. ஆண்கள் பெரும்பாலும் தலைமுடியை மேல் நோக்கி மேவி இழுக்கின்ற போதும் முடியில் அழுத்தம் ஏற்பட்டு அதன் வலிமையை அழிக்கின்றது.

ஆக தலைக்கவசம் அணிவதால்தான் முடி உதிர்கிறது என்ற கருத்து முற்றிலும் தவறானதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் பயப்படாமல் தலைக்கவசம் அணியலாம். அது முடியையும் மூளையையும் வெளிச் செயற்பாடுகளிலிருந்து பாதுகாக்கின்றதே தவிர ஒருபோதுமே கேடாக அமையாது.

ஆனால் தலைக்கவசம் அணிகின்ற போது நீங்கள் கண்டிப்பாக சில விடயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும்.தலைக்கவசம் போன்ற தலையில் அணிபவற்றை எப்போதும் மெதுவாக கழற்ற வேண்டும். வேகமாக இழுத்தால்இ முடியின் ஏதேனும் ஒரு பகுதியில் மாட்டிக்கொண்டுஇ வலியை ஏற்படுத்தும். இதனால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடும். முடி உதிர்வு ஏற்படும்.

எப்போதும் சுத்தமான தலைக்கவசத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுத்தமற்ற தலைக்கவசத்தினால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும். நீங்கள் கைக்குட்டையால் தலையை கவர் செய்துவிட்டு பின்னர் தலைக்கவசம் அணியலாம். இதன் மூலம் தலைக்கவசத்தில் உள்ள அழுக்குத் தலையில் படியாமல் இருக்கும்.


உள்ளூராட்சி மன்றங்கள் 40க்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியீடு!
வானிலை அறிவித்தல்களை தமிழில் வெளியிடுவதற்கு திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை!
சிறுவர்களுக்கான  பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் - யுனிசெப்!
சிறுவர்களைத் தாக்கும் மர்ம வைரஸ்: அச்சத்தில் தென்னிலங்கை!
ஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்!