தரம் ஐந்தாம் புலமை பரிசில் பரிட்சை: மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை!

Wednesday, August 16th, 2017

இன்று நள்ளிரவு 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிட்சை நிறைவடையும் வரையில், ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.அதன்படி பரீட்சையுடன் தொடர்புடைய எந்த ஒரு செயற்பாட்டிற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் எந்தவொரு இடத்திலோ அல்லது நிறுவனத்தினாலோ இந்த உத்தரவு மீறப்படும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது பரீட்சை திணைக்களத்திற்கோ முறையிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related posts: