தண்ணீரை நாசமாக்குபவர்களைத் தண்டிக்க இறுக்கமான சட்டம் வேண்டும்  -நீர்ப்பாசனத் திணைக்களம்!

Friday, March 16th, 2018

வடக்கில் குடிதண்ணீரின் பெறுமதியை அறியாது பலர் பிழை விடுகிகின்றனர் . இவர்களின் நாசகாரச் செயல்களுக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது கையறு நிலையிலே இருக்கின்றோம் தண்ணீர் பாவனைக்கு உரிய சட்டங்கள் எதுவும் இல்லாமையே இதற்குக் காரணம். அழியும் வளத்தை காப்பதற்கு நீர்ப்பாவனைக்கு இறுக்கமான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணத்தின் நீர்வளம் தொடர்பாக தொண்டமனாறிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தில், அணைக்கட்டின் பாதுகாப்பு மற்றும் நீர் வடிகால் உத்தேச திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று இடம் பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இவர் மேலும் தெரிவித்ததாவது :

வடக்கு மாகாணத்தில் குடிதண்ணீர் பாவனையாளர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

பொதுமக்கள் நாளாந்தம் எவ்வளவு குடி தண்ணீர் தொடர்பாக  பொது மக்கள் இழைக்கின்ற குற்றங்களுக்கோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.  உரிய சட்ட ஏற்பாடுகள் இவற்றுக்கு உருவாகக்ப்படவில்iலை.

வடக்கில் குடிதண்ணீர் பெறுமதியை அறியாத பலர் விடுகின்ற பிழைகளுக்கு எம்மால் எதுவம் செய்ய முயாதுள்ளது .குடிதண்ணீரின் பெறுமதியை அறியாத பலர் விடுகின்ற பிழைகளுக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.

குடிதண்ணீரின் வளத்தைப் பாதுகாக்க இறுக்கமான சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதனூடாகவே எம்மால் குடிதண்ணீரைப் பாதுகாக்க முடியும் – என்றார்

Related posts: